அட்லாண்டாவில் சாலையில் கொட்டிய பணமழை!

July 12, 2019 25 0 0

பணமழையா? அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் சில நாட்களுக்கு முன் சாலையில் பணம் பறந்துகொண்டிருந்தது. சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் சற்று ஆச்சரியமாகதான் பார்த்துள்ளனர். நம்பமுடியவில்லை பணமழை பெய்துகொண்டிருப்பதை பார்த்து சாலைகளில் தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை பொறுக்கி கொண்டனர். இந்த தகவல் போலீஸுக்கு சென்றுள்ளது. உடனே விரைந்த போலீசார், பணம் சிதறிக்கிடப்பதை பார்த்து விசாரணையில் இறங்கினர் அவ்வழியாக சென்ற ட்ரக் ஒன்றில் இருந்து பணம் சிதறியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். $175,000 அமெரிக்க டாலர் பணம் பறிபோயுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ1.2 கோடியாகும். மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பண மழை காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவ தொடங்கி உள்ளது. நிறைய பேர் தாங்கள் அந்த இடத்தில் இல்லையே என்று ஆதங்கப்பட்டு பதிவுகள் இட்டுள்ளனர்.

Categories: headlines, world news
share TWEET SHARE