இந்த வாரமும் காப்பாற்றப்பட்டார் மதுமிதா… பிக்பாஸ் வீட்டில் சாண்டி கலகலப்பு

July 14, 2019 41 0 0

இன்றைய வெளியேறும் பட்டியலில் இருந்து மதுமிதா காப்பாற்றப்பட்டுள்ளதாக ப்ரோமா வீடியோ வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் புரோமோ வீடியோ ஒன்றில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் சாண்டி எழுந்து மதுமிதா எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் காண்பித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டது. சாண்டியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களும் கமல்ஹாசஉம் ஆச்சரியம் அடைந்து சிரித்தனர். மதுமிதாவும் சாண்டியை செல்லமாக அடித்தார்.

Categories: india news
share TWEET SHARE