மாலுக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… மக்கள் அச்சத்தில் ஓட்டம்

July 14, 2019 37 0 0

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக் தீவில் இந்தோனேஷியா நேரப்படி மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள், உயிர் பயத்தால் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் மாலுக் மாகாணத்தின் வடக்கு பகுதியில், டெர்னெட்டோ என்ற நகருக்கு தென்மேற்கு திசையில் சுமார் 165 கி.மீ. தூரத்தில் பூமியின் அடியில் 10 கி.மி. ஆலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இன்று மதியம் ஆஸ்திரேலியாவவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது, இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories: world news
share TWEET SHARE