யோகி பாபுவுக்காக மும்பை சென்று படப்பிடிப்பு நடத்திய A 1 படக்குழு

July 14, 2019 45 0 0

யோகிபாபுவுக்காக மும்பை சென்று அவரது காட்சிகளை படப்பிடித்துள்ளனர் A 1 படக்குழுவினர். தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உச்சத்தை தொட்டிருப்பவர் யோகி பாபு. மாதத்திற்கு கிட்டத்தட்ட 2 படங்களாவது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகிவிடுகிறது. பல படங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அடுத்து வரவிருக்கும் விஜயின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து தற்போது திரைக்கு வரவிருக்கும் A 1 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்ததால் அவருக்காக படக்குழு மும்பை சென்று அவரின் காட்சிகளை படமாக்கியுள்ளது. இந்த நிகழ்வினை சமீபத்தில் படக்குழு தெரிவித்துள்ளது.

Categories: Cinema
share TWEET SHARE