விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்

July 14, 2019 57 0 0

விக்ரமின் அடுத்த படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிப்பில் இன்னும் சில தினங்களில் கடாரம் கொண்டான் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அதுபோக துருவ நட்சத்திரம் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னின் செல்வன் படத்திலும் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையில் விக்ரமின் 58வது படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தில் இசையமைக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Categories: Cinema
share TWEET SHARE