உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும் அரிசி மோர் கஞ்சி

August 12, 2019 10 0 0

உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தரும் அரிசி மோர் கஞ்சியை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இந்த அரிசி மோர் கஞ்சி. அரிசி மோர் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – ஒரு கப், மோர் – இரண்டு கப், சின்ன வெங்காயம் – 5, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைத்து கொள்ளவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும். உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி தரும் இந்த உணவு.

Categories: womens-tips
share TWEET SHARE