கன்னட படத்தில் முதன்முறையாக பாடிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா

August 13, 2019 26 0 0

முதன்முறையாக பாடல்… ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பேயலதாதா பீமண்ணா என்ற கன்னட படத்தில் முதன்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் திடீரென சினிமாவுக்கு வந்துள்ளார். பாடகியாக அறிமுகமாகியுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவரை பாட அழைத்தனர். அதன்பேரில் இந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார். இதுகுறித்து ரூபா கூறியதாவது: ‘இது டூயட் பாடல் கிடையாது. இந்துஸ்தானி இசையை நான் கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே பாடினேன். இப்பாடலுக்காக ஒருவாரம் பயிற்சி எடுத்து பாடினேன். ஜானகி, லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது.’ என்றார்.

Categories: Cinema
share TWEET SHARE