காஷ்மீரில் வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க வலியுறுத்தல்

August 13, 2019 17 0 0

நீக்க வேண்டும்…காஷ்மீரில் வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. 370வது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்டெர்னெட், செல்போன் உள்பட அனைத்து விதமாக தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த 8 கணக்குகளுக்கு தடை விதிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நிலைமை இயல்பாகவே இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படைகளால் ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படவில்லை. பக்ரீத் தொழுகை அமைதியாக நடைபெற்றதாக ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார். 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories: headlines, world news
share TWEET SHARE