கொச்சின் சர்வதேச விமான நிலையம் திறப்பு… கொழும்பில் இருந்து விமான சேவை தொடக்கம்

August 13, 2019 186 0 0

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொழும்பில் இருந்து விமான சேவைகள் தொடங்கின. கொச்சின் சர்வதேச விமான நிலையம் திறப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான UL-166 என்ற விமானம் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு சேவையை மேற்கொண்டது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக கொச்சின் சர்வதேச விமான நிலையதிற்கான விமான சேவைகள் கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Categories: sri lanka
share TWEET SHARE