கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்… திசாநாயக்க சொல்கிறார்

August 13, 2019 43 0 0

அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபலமான அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் எஸ்.பீ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Categories: sri lanka
share TWEET SHARE