சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே நோக்கம்… அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சொல்கிறார்

August 13, 2019 17 0 0

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே நோக்கம்…நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்ற சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டம் பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹரின் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக பொது கொள்கை இனியும் தொடரும் என்பதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை. அத்துடன் எமது கட்சிக்கு, குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஒருபோதும் கிடையாது. அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சி, மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே களமிறக்கும். அதாவது நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்ற ஒருவரென்றால் அது அமைச்சர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே ஆகும். ஆகையால், அவரை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். மேலும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடிய பலமும் அவரிடம் உள்ளது. இதனால் சஜித்தை வெற்றிப்பெறச் செய்வதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் நிச்சயம் முன்னெடுப்போம்” என ஹரின் தெரிவித்துள்ளார்.

Categories: sri lanka
share TWEET SHARE