சாத்துக்குடி சாறு தினமும் சாப்பிடுங்கள்… உடல் புத்துணர்வு பெறும்!

August 13, 2019 11 0 0

சாத்துக்குடி சாற்றை தினமும் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவது மட்டுமின்றி ஆரோக்கியமும் ஏற்படும. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலுகொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு சாத்துக்குடி பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது. சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும். சாத்துக்குடி அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது. மெனோபாஸ் காலங்களில் பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது. சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும்.

Categories: womens-tips
share TWEET SHARE