துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் காலில் காயம்… போலீசார் விசாரணை

August 13, 2019 24 0 0

சிறுவன் காயம்… டேன்போர்த் இன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான 16 வயதுச் சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Donlands Avenue மற்றும் Strathmore Boulevard பகுதியில் அமைந்துள்ள பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்த போது, அங்கே குறித்த அந்தச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேவேளை குறித்த அந்தச் சம்பவ இடத்திலிருந்து பிறிதொரு ஆண் கைது செய்யப்ப்டடதாகவும், எனினும் அந்தக் கைதுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. விசாரணைகளின் தொடர்ச்சியாக கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த அந்தச் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறுவன் தவறுதலாக தனக்குத் தானே சுட்டுக் கொண்டிருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories: Canada
share TWEET SHARE