நாளை வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில்

August 13, 2019 17 0 0

பிரதமர் விஜயம்… பிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கவுள்ளார். மேலும் இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, நெதர்லாந்து துணை தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பிரதமரது வருகையை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்தக நிலையங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவடிக்கை சிவில் உடை தரித்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Categories: sri lanka
share TWEET SHARE