நோர்த்யோர்க் பகுதியில் துப்பாக்கிச்சூடு… ஒருவர் படுகாயம்

August 13, 2019 6 0 0

நோர்த் யோர்க் பகுதியில் வைத்து ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Sheppard Avenue Westற்கு தெற்கே, Yonge Street மற்றும் Florence Avenue பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு சென்றதாகவும், சம்பவ இடத்தில் வாகனம் ஒன்று பல துப்பாக்கிச் சூடு பட்டதால் சேதமடைந்து காணப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்துள்ள நிலையில், அவர் குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

Categories: Canada
share TWEET SHARE