பணி நியமனம் பெற்ற 51 பட்டதாரிகள் பொறுப்பேற்கவில்லை

August 13, 2019 56 0 0

பொறுப்பேற்கவில்லை… பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது கட­மை­க­ளைப் பொறுப்பேற்கவில்லை என வவு­னியா மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்­ளார். நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நியமனத்தில் இரண்­டாம் கட்ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்கப்­பட்­டி­ருந்­தது. அவர்க­ளில் 197 பேர் நிய­ம­னக் கடி­தங்­களை பெற்­று இருந்­த­னர். நிய­ம­னக் கடி­தங்­களை பெற்ற 197 பேரில் தற்­போது வரை 146 பேர் மட்­டுமே கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ள­னர் என மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். மேலும் 57 பட்­ட­தா­ரி­கள் தமக்­கான கட­மை­களைப் பொறுப்­பேற்­கவில்லை என்றும் இவர்கள் ஏற்­க­னவே வேறு கட­மை­க­ளில் இருக்­க­லாம் என கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Categories: sri lanka
share TWEET SHARE