பென்சில்வேனியா மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து

August 13, 2019 23 0 0

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தீவிபத்து…அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பணிக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை பாதுகாக்கும் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவின் எரீ ((Erie)) நகரில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், இரவுப் பணிக்கு செல்லும் பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை விட்டுச் சென்றிருந்தனர். நள்ளிரவில் அந்த மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த குழந்தைகளில் 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான குழந்தைகளின் வயது குறித்து சரிவர தகவல்கள் வெளியிடப்படவில்லை. தீவிபத்துக்குள்ளான வீட்டிலிருந்து நடுத்தர வயதுடைய ஒருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தீவிபத்துக்குள்ளான வீட்டின் முன்பு பொம்மைகள், மலர்கள் மற்றும் பலூன்களை வைத்து பலியான குழந்தைகளுக்கு சிலர் அஞ்சலி செலுத்தினர்.

Categories: headlines, world news
share TWEET SHARE