மக்களை சுதந்திரமாக சந்திக்க வேண்டும்… கவர்னர் அழைப்பு பதில் அளித்த ராகுல்காந்தி

August 13, 2019 22 0 0

மக்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதிக்க வேண்டும்… காஷ்மீருக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்த அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், மக்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலத்தில் வன்முறை நடப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ராகுல் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியதாவது: காஷ்மீர் வர வேண்டும் என ராகுலுக்கு அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தில் சூழ்நிலையை ஆராய்ந்து பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். பொறுப்பான நபரான நீங்கள், அவ்வாறு பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்து ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மரியாதைக்குரிய கவர்னர் மாலிக், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர், காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வர வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையை ஏற்கிறோம். எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Categories: india news
share TWEET SHARE