மதிப்பீடு செய்து வெள்ள நிவாரணம் வழங்கப்படும்… முதல்வர் சொல்கிறார்

August 13, 2019 20 0 0

மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும்…மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணங்கள் வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீலகிரியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இருப்பதாக குறிப்பிட்டார். சேத மதிப்புகளை ஆய்வு செய்த பின் மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும் என்று அவர் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விளம்பரத்திற்காக அவர் சென்றதாக முதலமைச்சர் விமர்சித்தார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதால் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.  

Categories: india news
share TWEET SHARE