வெள்ள நீரில் தெர்மாக்கோலில் உட்கார்ந்து செல்பவர் வீடியோ வைரல்

August 13, 2019 21 0 0

பாகிஸ்தானில் வெள்ள நீரில் ஒருவர் தெர்மாக்கோலில் அமர்ந்து செல்லும் வீடியோ செம வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ள்த்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள நீரில் ஒருவர் தெர்மாகோலில் உட்கார்ந்தபடியே மிதந்து சென்ற காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கராச்சி பகுதியில், வீட்டினுள்ளிருந்து ஒருவர் இதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இஸ்தான்புல் நாட்டின் பிரபலமான கதையான அலாவுதீனில் இவ்வாறு தான் கதாநாயகன் ஒரு போர்வை மீது அமர்ந்து பறந்து செல்வார் என இந்த பதிவின் கீழ் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். Aladdin spotted in Karachi. Posted by Hunain Zaidi on Sunday, August 11, 2019

Categories: world news
share TWEET SHARE