ஹாங்காங் விமான நிலையம் இன்று மீண்டும் இயங்க தொடங்கியது

August 13, 2019 5 0 0

மீண்டும் இயங்க தொடங்கியது விமான நிலையம்….ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், நேற்று மூடப்பட்ட ஹாங்காங் விமான நிலையம் இன்று மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. ஹாங்காங்கில் குற்றமிழைப்பவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்ட மசோதாவை, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்நாட்டு அரசு நிறைவேற்றாமல் கைவிட்டது. ஆனாலும் அரசின் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது போலீசார் தாக்கியதில் பெண் போராட்டக்காரர் ஒருவருக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து குழப்பம் ஏற்பட்டதால் பெரும்பாலான போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் சுமார் 50 பேர் தற்போதும் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழப்பமான சூழல் சீரானதை அடுத்து செயல்பாட்டுக்கு வந்த விமான நிலையத்திலிருந்து, சில விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இன்றும் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories: headlines, world news
share TWEET SHARE