சம்பளத்தை உயர்த்தி கேட்ட காஜல்… அதிர்ச்சியான தயாரிப்பாளர்

August 16, 2019 1 0 0

சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை காஜல் அகர்வால்…நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இது பலருக்கும் மகிழ்ச்சியான விசயம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜித், விஜய், தனுஷ், சூர்யா என அநேக ஹீரோக்களுடன் அவர் நடித்துவிட்டார். அவருக்கு அண்மைகாலமாக தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்து வருகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தில் 7 இலக்கம் கொண்ட தொகைக்கு மாற்றி உயர்த்திவிட்டார். இதனால் சில தயாரிப்பாளர்கள் அவருக்கு கொடுத்து வந்தனர். ஆனால் அவர் தற்போது தனக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட், பவுன்சர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என அனைவருக்கு தனியாக பணம் வேண்டும் என கேட்க அண்மையில் ஒரு தயாரிப்பாளர் அவருக்கு பதிலாக மெஹ்ரீன் என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

Categories: Cinema
share TWEET SHARE