நாயை இரையாக்கிய மலைப்பாம்பு… மக்கள் துன்புறுத்தலால் இரையை கக்கிவிட்டு தப்பியது

August 16, 2019 1 0 0

ராஜஸ்தான் மாநிலத்தில் நாய் ஒன்றை விழுங்கிய மலைப்பாம்பு மக்களின் சீண்டலால் இரையை கக்கி விட்டு தப்பியது. அந்த மாநிலத்தின் உதய்பூர் அருகே உள்ள வனத்தில் கிராம மக்கள் சிலர், இரையை விழுங்கி விட்டு நகரமுடியாமல் நெளிந்து கொண்டிருந்த 13 அடி நீள மலைப்பாம்பு ஒன்றை துன்புறுத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக, வெள்ளத்தில் சிக்கிய வனவிலங்குகளை காக்க சென்ற குழுவினர் இந்த காட்சியை கண்டனர். அவர்கள் அங்கு சென்ற போது, மலைபாம்பு, மனிதர்களிடம் இருந்து தப்பிக்க, தான் விழுங்கிய இரையை கக்கத் தொடங்கியது. பதினான்கே வினாடிகளில் இரை கக்கிய மலைபாம்பு அங்கிருந்து நழுவி காட்டுக்குள் விரைந்தது. காட்டை ஒட்டிய கிராமத்தில் இருந்து தெரு நாயின் தலையை கவ்வி, அந்த பாம்பு விழுங்கி இருந்ததால், அது கக்கும் போது முதலில் நாயின் வாலும், பின்னங்கால்களும் மட்டுமே தென்பட்டன. வெறும் பதினான்கே வினாடிகளில் நாயை கக்கிய மலை பாம்பு, தன் உயிரை காத்துக் கொள்ள அங்கிருந்து வேகமாக தப்பியது. மலைப்பாம்புகள் தனது உருவத்தை விட பல மடங்கு பெரிய உயிரினங்களையும் விழுங்கும் வகையிலான வாய், தாடை அமைப்பை பெற்றுள்ளன. பெரிய விலங்குகளை, தனது உடலால் சுருட்டி, இறுக்கி மூச்சுத்திணறடித்து கொன்று, பின்னர் மலைப்பாம்பு விழுங்கி விடும். இப்படி விழுங்கும் மலைப்பாம்பு, தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று கருதினால், விழுங்கிய இரையை உடனடியாக கக்கி விட்டு தப்பி விடும். இரையை விழுங்கவும், அதனை கக்கவும் மலைபாம்புகள் அதிக சக்தியை செலவழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: india news
share TWEET SHARE