பாலியல் ரீதியாக 4 வாரத்தில் 13 பெண்களை பாலியல் ரீதியாக தாக்கிய சிறுவன் கைது

August 16, 2019 3 0 0

14 வது சிறுவனின் அடாவடி செயல்… இங்கிலாந்தில் 14 வயது இளம் சிறுவன் ஒருவன், 4 வார காலத்துக்குள் 13 பெண்களை பாலியல் ரீதியாக தாக்கிய சம்பவம் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி பெங்கே, பெக்கென்ஹாம் தெற்கு லண்டன் பகுதிகளில் பெண்களை பாலியல் ரீதியாக இளம் சிறுவன் தாக்கியதாக போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. பெரும்பாலும் இரவு நேரக் கேளிக்கை விடுதிக்கு வெளியிலும், ரயில் நிலையம் போன்ற இடங்களிலேயே பெண்கள் அதிகம் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான நிலையில் போலீசார் ரோந்தைத் தீவிரப்படுத்தினர். சந்தேகத்துக்கு இடமான வகையில் மார்ச் மாதம் 4-ம் தேதி 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் பிடிபட்டான் அப்போது அவன் மீது 6 பெண்களை பாலியல் ரீதியாக தாக்கிய வழக்குகள் மட்டுமே பதியப்பட்டன. இந்நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவன் மேலும் 7 பேரிடம் அத்து மீறியது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில், அடுத்த மாதம் 10-ம் தேதி மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்படவுள்ளதால் கடும் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Categories: headlines, world news
share TWEET SHARE