மழை வெள்ள நேரத்திலும் நல்ல வசூல் செய்த அஜித் படம்

August 16, 2019 3 0 0

மழை வெள்ள நேரத்தில் கூட கேரளாவில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படம் வசூலை அள்ளியுள்ளது. அஜித் சினிமாவில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறார். அவர் சொல்லப்போகும் விசயம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் படம் எடுப்பவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அவரும் மிகுந்த கவனத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தின் கதையை கையில் எடுத்து சிறப்பாக நடித்ததோடு நாட்டில் தற்போது பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் இப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அண்மைகாலமாக அங்கு பெரும் மழை வெள்ளத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஆனாலும் படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் இருந்து வருகிறது. இன்னும் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளார்களாம். இதே போல கடந்த 2015 ல் சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் வேதாளம் படம் வெளியான போதும் நல்ல வசூல் செய்தது என்பது !குறிப்பிடத்தக்கது.

Categories: Cinema
share TWEET SHARE