“வத்திக்குச்சி வனிதா”… சண்டையை மூட்டிவிடுவதால் பட்டபெயர் வைத்த லாஸ்லியா

August 16, 2019 1 0 0

வந்த வேலையை சரியாக செய்கிறார். சண்டை மூட்டி விட்டு வருகிறார் வனிதா என்று ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுக்கு போட்டியாளர் லாஸ்லியா வத்திக்குச்சி என்று பெயர் வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தினம்தோறும் வாக்குவாதம் சண்டை என இருப்பதற்கு காரணம் வனிதா தான். மக்கள் ஓட்டளித்து வெளியேற்றிய ஒருவரை மீண்டும் விஜய் டிவி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருப்பதைதான் தற்போது ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பலரையும் தூண்டிவிட்டு பிரச்சனை ஏற்படுத்தும் வனிதாவுக்கு லாஸ்லியா ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளார். “வத்திகுச்சி வனிதா” தான் அது. வந்த முதல்நாளிலேயே சைலன்ட் கில்லர் என்று லாஸ்லியாவை பற்றி மற்ற மோட்டியாளர்களிடம் பற்ற வைத்தார் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories: Cinema
share TWEET SHARE