வெள்ளத்தில் பாலத்தை கடக்க ஆம்புலன்ஸ்க்கு உதவிய 12 வயது சிறுவன்

August 16, 2019 2 0 0

சிறுவனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்… கர்நாடகத்தில் வெள்ளத்தின் போது ஆம்புலன்சை வழிநடத்திய 12 வயது சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ராய்ச்சூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹிரேரயானாகம்பி என்ற ஊரில், ஆற்றுப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. அப்போது ஒரு பெண்ணின் சடலம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. வெள்ளப்பெருக்கால் சாலை மூழ்கி காணப்படவே, பள்ளம் எது, சாலை எது என்பதை அறியமுடியாமல் குழம்பிப் போன ஓட்டுநர், அங்கிருந்த 12 வயது சிறுவன் வெங்கடேசை உதவிக்கு அழைத்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட சிறுவன் சற்றும் தாமதிக்காமல் வெள்ளப் பெருக்கில் ஆம்புலன்சை வழிநடத்தினான். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவனின் தைரியத்தால் ஆம்புலன்ஸ் கரை சேர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அச்சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். சிறுவனின் தைரியத்தைப் பாராட்டி அம்மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Categories: headlines, india news
share TWEET SHARE