24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

August 16, 2019 2 0 0

24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் 24 மணி நேரத்தில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு திசையை நோக்கி 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 9 சென்டிமீட்டரும், திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பக்கத்தில் 7 சென்டிமீட்டரும், திருத்தணியில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Categories: india news
share TWEET SHARE