உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் 28 பேர் உயிரிழப்பு

August 17, 2019 3 0 0

கனமழையால் 28 பேர் உயிரிழப்பு…உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக 28 பேர் உயிரிழந்தனர். சாலைகளில் வெள்ளம் பெருகி ஓடுகிறது. ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன. இதனால் பல பகுதிகளில் தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வீடுகளும் இடிந்துள்ளன. உத்தரகாசி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கிப் பாயும் ஹலாரா ஆற்று வெள்ளத்திற்கு இடையே பெண்களும், குழந்தைகளும் உயிரைப் பணயம் வைத்து. கயிறுகட்டி அதைப் பிடித்தபடி ஆற்றைக் கடக்கின்றனர்.

Categories: india news
share TWEET SHARE