தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

August 17, 2019 10 0 0

இந்திய ராணுவத்தினர் முறியடிப்பு… இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தையடுத்து அந்த முயற்சி இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளை ஊடுரவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லையில் கடும் துப்பாக்கிச் சத்தம் நீடித்தது. இதையடுத்து தீவிரவாதிகள் காஷ்மீரின் வடக்குதிசை பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஆக்ரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலுக்காக பாகிஸ்தான் ராணுவம் ஒரு தொலைத் தொடர்பு மையத்தையே ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை இயக்க இந்த தொலைத்தொடர்பு மையம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: india news
share TWEET SHARE