பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ வீட்டில் இருந்து ஏ.கே.47 பறிமுதல்

August 17, 2019 2 0 0

எம்எல்ஏ வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்…பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவாக இருந்த ஆனந்த் சிங் என்பவர், முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ.வாகி இருக்கிறார். அவர்மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நாட்வா கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாட்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ஏகே47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை உள்ளூர் எம்.பி. மற்றும் அமைச்சரே காரணம் என்றும், அந்த வீட்டிற்குச் சென்றே பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் ஆனந்த்சிங் கூறியுள்ளார்.

Categories: headlines, india news
share TWEET SHARE