பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை… பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

August 17, 2019 2 0 0

பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு…பெங்களூர் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து நகரில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர ஆணையர் பாஸ்கர ராவ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை அடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். புல்வாமா போன்ற சம்பவங்கள் இந்தியாவில் மீண்டும் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் மறைமுகமாக எச்சரித்திருந்தார். இந்நிலையில் பெங்களூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெங்களூரில் ஹை அலர்ட் எனப்படும் மிகத் தீவிரமான எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Categories: india news
share TWEET SHARE