முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லீ உடல்நிலை பின்னடைவு

August 17, 2019 8 0 0

உடல்நிலை பின்னடைவு…முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அருண் ஜேட்லீயின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோரும் அவரைப் பற்றி நலம் விசாரித்தனர். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அருண் ஜேட்லீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் பெற வேண்டினர்.

Categories: india news
share TWEET SHARE