ஆல்டோனா நகரில் தொலைபேசியில் பேசி தகவல்கள் திருடும் கும்பல்

September 10, 2019 13 0 0

தகவல்கள் திருடும் கும்பல்…கனடாவின் மனிடோபா மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள ஆல்டோனா நகரில் தொலைபேசி ஊடாக மக்களை குறிவைத்து காப்பீட்டு எண் வங்கி தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடிக் கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சமீபத்தில் பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த மோசடிக் கும்பலிடம் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை ஆல்டோனா நகர பொலிஸார் எச்சரித்துள்ளனர். தொலைபேசி மூலம் மோசடி கும்பலைச் சேர்ந்தோர் மக்களை குறிவைக்கின்றனர். சட்டவிரோத நடவடிக்கை காரணமாக உங்கள் சமூக காப்பீட்டு எண் (social insurance number) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மோசடி தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு தனி நபா்களின் வங்கி இலக்கம், காப்பீட்டு எண் உள்ளிட்ட தகவல்கள் கோரப்படுகின்றன. இந்த மோசடி குறித்து நேற்று திங்கள்கிழமை காலைக்குள் அல்டோனா பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள் வழங்கப்பட்டன. மோசடி கும்பலைச் சேர்ந்தோர் தானியங்கி தொலைபேசி அழைப்புக்கள் மூலம் இவ்வாறான மோசடியில் ஈடுபடுகின்றனா். இவ்வாறான அழைப்புக்களை கண்டுகொள்ள வேண்டாம். உங்களுக்கு வரும் இனம் தெரியாத அல்லது புதிய தொலைபேசி அழைப்புக்களுக்கு மீள் அழைப்பு செய்ய வேண்டாம். மேலும் உங்கள் காப்பீட்டு எண், வங்கி தகவல்கள் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் யாருக்கும் வழங்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories: Canada, headlines
share TWEET SHARE