இறந்த மாமியாரின் உடலை சுமந்து சென்ற பாசக்கார நான்கு மருமககள்கள்… மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்

September 10, 2019 11 0 0

மாமியார் உடலை சுமந்து சென்ற மருமகள்கள்… மகாராஷ்டிர மாநிலத்தில், இறந்த மாமியார் உடலை, நான்கு மருமகள்கள் இணைந்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக் காட்சித் தொடர்களில், மாமியார் மருமகளுக்கு இடையில் போட்டி, பொறாமை, போன்ற காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று மரணமடைந்த, சுந்தர்பாய் நெய்க்வடே (83) என்ற மூதாட்டி காலமானார். இந்நிலையில் அவரது கண்களை தானமாக அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்பேயின் கணவர் இறந்த போது, அவரது கண்களையும் தானம், செய்துள்ளனர். சுந்தர்பாய் நெய்க்வடே ,உயிருடன் வாழும்போது, தனது 4 மகன்கள்,4 மருமகள்கள், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் மீது அளவில்லாத பாசம் கொண்டவராக இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அப்போது, 4 மருமகள்களும் கண்ணீருடன் பாசம் தழுதழுக்க.. மயானத்திற்குப் பாதி தூரம் மாமியாரை உடலைச் சுமந்துகொண்டு சென்றனர். அதன்பின்னர் ஆண்கள் அவர்களிடமிருந்து சுந்தர்பாய் நெய்க்வடேயின் உடலை வாங்கி, மயானத்திற்குக் கொண்டு சென்றனர். மாமியாரின் உடலை 4 மருமகள்களும் சேர்ந்து தங்கள் தோளில் வைத்துத் தூக்கிச் சென்ற சம்பவம் எல்லோருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories: headlines, india news
share TWEET SHARE