இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஈரான் அமைச்சர்

September 10, 2019 6 0 0

குற்றச்சாட்டுக்கு மறுப்பு… ரகசிய இடத்தில் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீப் நிராகரித்துள்ளார். அணுஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அக்குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திங்கள்கிழமை பேசியபோது, ரகசிய இடத்தில் ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், ஆனால் அந்த தகவல் வெளிப்பட்டு விட்டதால், அந்த இடத்தை ஈரான் அழித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீப் நிராகரித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், உண்மையில் அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடான இஸ்ரேல், ஈரான் மீது பொய் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். போரையே நெதன்யாகுவும், அவரது ஆதரவாளர்களான அமெரிக்க அதிபர் டிரம்ப், சவூதி அரேபியா இளவரசர் உள்ளிட்டோர் விரும்புகின்றனர். போரில் உயிரிழக்கும் அப்பாவிகள் குறித்து அவர்களுக்கு கவலை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories: world news
share TWEET SHARE