சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்… சினேகன் போட்டார் டுவிட்

September 10, 2019 7 0 0

பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சினேகனை அழைத்துள்ளார்களாம். இதை அவரே தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி தற்போது மிகவும் பரபரப்பாக செல்கிறது. சேரன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு இப்போது சீக்ரெட் அறையில் தங்கி உள்ளார். எல்லோரும் என்னென்ன பேசுகிறார்கள் என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல பாடலாசிரியர் சினேகனை அழைத்துள்ளார்களாம், இதனை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். இவர் வனிதாவை நினைத்துதான் இப்படி தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Categories: Cinema
share TWEET SHARE