டோரியன் புயலுக்கு பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தல்

September 10, 2019 6 0 0

மௌன அஞ்சலி…டோரியன் புயலுக்கு பலியானோருக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பஹாமஸ் தீவுகளை அண்மையில் டோரியன் புயல் தாக்கியது. இதில் அப்பாவி மக்கள் 43 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், பஹாமஸ் தீவுகளில் டோரியன் புயலில் பலியானோருக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரீபியன் பகுதிகளில் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக டோரியன் குறிப்பிடப்படுகிறது.

Categories: world news
share TWEET SHARE