தொடர்ச்சியாக 30 முறை பல்டி அடிக்கும் மாணவர்களின் வீடியோ ஆகுது செம வைரல்

September 10, 2019 24 0 0

தொடர்ச்சியாக 30 முறை பல்டி அடித்துள்ள மாணவர்களின் வீடியோதான் தற்போது செம வைரலாகி வருகிறது. உலகம் எங்கிலும் பலகோடி திறமைசாலி இளைஞர்கள் மூலை முடுக்கெல்லாம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய வசதியும் , அங்கீகாரமும் இல்லாமல் சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டுள்ளார். அந்த திறமைசாலிகளுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாகவே வந்துள்ளது நவீன இணையதளம், சமூகவலைதளம், மற்றும் ஊடகங்கள். நம் இந்தியாவில் பெரிய அளவில் திறமைசாலிகள் உள்ளனர். ஆனால் நாம் தான் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதில்லை. அப்படி இருந்தாலும் ஒரு ஜன்னல் ஓர ரயில் பயணியைப் போலக் கடந்து சென்றுவிடுகிறோம். இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், கல்கத்தாவைச் சேர்ந்த ஜாஷிகா கான், முகமத் அசாசுதீன் ஆகிய இரு மாணவர்கள் பல்டி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரகம் டேக் செய்துள்ளது. மேலும் இப்படி தொடர்ச்சியாக 30 முறை பல்டி அடித்துள்ள மாணவர்களின் திறமையை அனைவரும் பாராட்டிவருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை 1 லட்சத்துக்கு மேல் மக்கள் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.

Categories: india news
share TWEET SHARE