நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை சம்பல்… குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு உதவும்

September 10, 2019 12 0 0

நினைவு ஆற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வல்லாரை கீரை சம்பல் செய்ய தேவையான பொருட்கள்: வல்லாரை கீரை – 1 கப், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 1, எலுமிச்சம் பழம் – 1 / 2 மூடி, மிளகு தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், ப.மிளகாயை சின்னதாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரை,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும். சத்தான வல்லாரை கீரை சம்பல் ரெடி.

Categories: womens-tips
share TWEET SHARE