முட்டைக்கோஸில் உள்ள அதிகளவு சத்துக்களால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம்

September 10, 2019 4 0 0

முட்டைக்கோஸில் உள்ள அதிகளவு சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

Categories: womens-tips
share TWEET SHARE