மோசமான விமர்சனத்தை சந்தித்தாலும் ரூ.400 கோடியை வசூலித்த சாஹோ

September 10, 2019 5 0 0

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சாஹோ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இருந்தாலும் வசூலில் அசத்தல் சாதனை செய்துள்ளது. சாஹோ தமிழில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது, சுமார் ரூ.10 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். ஆனால் உலகம் முழுவதும் இப்படம் ரூ 400 கோடி வசூலை கடந்துள்ளதாக சாஹோ படத்தின் தயாரிப்பு தரப்பே கூறியுள்ளது. இது அசத்தல் வசூல்தான் என்கின்றனர். அதே நேரத்தில் இப்படம் ரூ.600 கோடி வசூல் வந்தாலே ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும் என்பதால், இப்படம் தோல்வி தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

Categories: Cinema
share TWEET SHARE