வன்கூவர் தடுப்பு முகாமில் இருந்து ஆபத்தான குற்றவாளி தப்பியோட்டம்

September 10, 2019 7 0 0

ஆபத்தான குற்றவாளி தப்பியோட்டம்… கொலை, மற்றும் மோசமான தாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆபத்தான குற்றவாளி ஒருவர் வன்கூவர் தடுப்பு முகாமில் இருந்து தப்யோடியுள்ளார். கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். 26 வயதான டெய்லின் பிரான்சிஸ் ப்ரெண்ட் செகோசிஸ் என்ற இந்தக் குற்றவாளி கடைசியாக செப்ரெம்பர் 8 ஆம் திகதி பிற்பகல் 2.45 மணியளவில் வான்கூவரில் உள்ள தடுப்பு மையத்தில் இருந்து தப்பிச் சென்றதாக வன்கூவர் பொலிஸார் கூறினர். ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்தமை, ஆட்கள் மீது மோசமான தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட செகோசிஸ் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். படத்தில் காணப்படும் செகோசிஸ் என்ற குற்ற்வாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பழங்குடி மனிதரான இவர், ஐந்து அடி 10 அங்குல உயரமும் 160 பவுண்டுகள் எடையும் கொண்டவர். கறுப்பு-பழுப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களை உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செக்கோசிஸ் கடைசியாக ஒரு கருப்பு ஜக்கட், சாம்பல் நிற நீளக்காற்சட்டை, கறுப்பு தொப்பி மற்றும் கறுப்பு காலணிகள் அணிந்திருந்தார். கறுப்பு பையொன்றையும் அவர் வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Categories: Canada
share TWEET SHARE