ஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப்

September 11, 2019 7 0 0

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: முளைகட்டிய வெள்ளை கொண்டைக் கடலை – 1 கப், பூண்டு – 3 பல், மிளகுத்தூள் – சிறிதளவு, பெ.வெங்காயம், தக்காளி – தலா 1, பால் – 100 மில்லி, வெண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து கிளறவும். பிறகு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும். அது ஆறியதும் கொண்டைக்கடலை கலவையை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். ஓரளவு கெட்டியானதும் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாக மிளகு தூள் தூவ வேண்டும். அருமையான முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் ரெடி.

Categories: womens-tips
share TWEET SHARE