இரவு முழுவதும் விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் மழை

September 11, 2019 5 0 0

இரவு முழுவதும் மழை… விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி. மேல்மலையனுர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories: india news
share TWEET SHARE