உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஆயுர்வேத டீ தயாரிக்கும் முறை

September 11, 2019 6 0 0

இன்று அதில் உடல் எடையால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஆயுர்வேத டீயை பருகலாம். அது செய்யும் முறை குறித்து உங்களுக்காக. தேவையான பொருட்கள்: சீரகம் – 1 டீஸ்பூன், மல்லி – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கிராம்பு – 7, இஞ்சி – 2 துண்டு, பட்டை – 2 இன்ச், தண்ணீர் – 1 லிட்டர், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும். வடிகட்டிய இந்த டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நாளடைவில் குறைந்து விடும். உடல் எடையும் குறையும்.

Categories: womens-tips
share TWEET SHARE