சீக்ரெட் ரூமில் இருக்கிறாரா சேரன்? கண்டுபிடித்த போட்டியாளர்கள்

September 11, 2019 3 0 0

சீக்ரெட் ரூமில் இருக்கிறாரா சேரன் என்று போட்டியாளர்கள் கண்டுபிடித்து விட்டனர். பிக்பாஸில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் இயக்குனர் சேரன் எலிமினேட் செய்யப்பட்டு அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அது வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரியாது. இந்நிலையில் நேற்று சேரன் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று பேருக்கு கேள்வி கேட்டு கடிதம் எழுத வேண்டும் என பிக்பாஸ் கூறினார். அந்த கடிதத்தை வைத்தே அவர் சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார் என வனிதா உட்பட போட்டியாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். நாமினேஷன் பார்த்துவிட்டு கேள்வி கேட்பதாக சேரன் கேள்வியில் குறிப்பிட்டிருந்தார். ‘அது இன்னும் டிவியில் வந்திருக்காதே, எப்படி பார்த்தார். அப்போ சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார்” என வனிதா கண்டுபிடித்துவிட்டார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் நாமினேஷன் எபிசோட் வந்திருக்காது என்று எப்படி வனிதாவிற்கு தெரியும் என்று ரசிகர்களும் கேள்வி கேட்கின்றனர். வெளியில் நடப்பது வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு தெரியாத நிலையில் வனிதா எப்படி இந்த கேள்வியை எழுப்பினர் என்பதுதான் முக்கியமான கேள்வி. இதற்கு பிக்பாஸின் பதில் என்ன?

Categories: Cinema
share TWEET SHARE