தெஹ்ரீக் தாலிபனுக்கு அமெரிக்கா விதித்தது அதிரடி தடை

September 11, 2019 4 0 0

அமெரிக்கா தடை விதித்தது… பாகிஸ்தானின் தாலிபன் இயக்கமான தெஹ்ரீக் தாலிபனுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் நடத்தி சாதாரண மக்களை கொன்றதாக தாலிபன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்த இயக்கத்தின் தலைவர் முல்லா பாசுல்லா காலமானதையடுத்து நூர்வாலி என்பவர் தாலிபன் தலைவரானார். தீவிரவாத இயக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் அதன் நிதியாதாரத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். அல்கொய்தா இயக்கத்தின் துணை இயக்கம் போல் இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சர்வதேச அரங்கில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா அறிவித்த தடையால் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Categories: headlines, world news
share TWEET SHARE