நிரம்பும் நிலையில் ஹிராகுட் அணை… 10 மதகுகளில் மூலம் தண்ணீர் திறப்பு

September 11, 2019 6 0 0

ஹிராகுட் அணை திறப்பு… ஒடிசா மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிக நீளமான அணையான ஹிராகுட் அணை நிரம்புவதற்கு சில அடிகளே உள்ள நிலையில் அணையில் இருந்து 10 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் கன அடியாக உள்ளது. மொத்தம் 630 அடி உயரமுள்ள ஹிராகுட் அணையின் நீர்மட்டம் 625 அடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் 20 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் தண்ணீர் திறப்பை 10 மதகுகளாகக் குறைக்க அதிகாரிகள் முடிவெடுத்ததையடுத்து 10 மதகுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 17 அடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2 லட்சத்து 20 ஆயிரத்து 250 கன அடியாக உள்ளது. இதனால் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை நோக்கி உயரத் தொடங்கும் ஒடிசா மாநிலத்தில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories: india news
share TWEET SHARE