பிரதமரை சுட்டுக் கொல்வேன் என்று மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார்

September 11, 2019 5 0 0

விடுவிக்கப்பட்டார்… பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சுட்டுக் கொல்வேன். பாராளுமன்றக் கட்டடங்களை குண்டுவைத்துத் தகா்ப்பேன் என அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சஸ்காட்செவன் நபர் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளார். 53 வயதான டேவிட் பீட்டர்சன், பெப்ரவரி 12 அன்று அரச ஊழியர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதனையடுத்து அவருக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டது. பீட்டர்சன் மீதான அச்சுறுத்தல் குற்றச்சாட்டு வேண்டுமென்றே சோடிக்கப்பட்டதாக கருதுவதற்கு இடமிருப்பதாக நிபாவின் மாகாண நீதிமன்ற நீதிபதி ஹக் ஹாரடென்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது தெரிவித்தார் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரசு ஊழியர் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாக கருத முடியாது. ஆனால் அச்சுறுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அழைப்பு வந்த உடனேயே எந்த பதிவுகளும் குறிப்புகளும் எடுக்கப்படவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். நான் குற்றம் செய்யவில்லை. எனினும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு வழக்கை துரிதமாக முடித்து வெளியேற விரும்புகிறேன் என கடந்த மாதம் பீட்டர்சன் தெரிவித்தார். ஆனால் நீதிபதி ஈனஸ் கார்டினல் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலை தொடா்ந்த இந்த வழக்கு விசாரணைகளின் பின்னா் குற்றச்சாட்டக்களில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பீட்டர்சன் விடுவிக்கப்பட்டார்.

Categories: Canada
share TWEET SHARE